கன்னியாகுமரி மாவட்டம் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் கலா. இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கலா மார்த்தாண்டம் அருகே மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.
இதனால், மேல்புறம் பகுதியில் தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கலா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அருமனை அருகே மேல்புறம் ஆட்டோ ஸ்டாண்டில் விளக்கு கம்பத்தில் கட்டி வைத்து கலா சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அருமனை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
மேலும் இருவரை தேடி வருகின்றனர். இதனிடையே நேற்று கலா வீட்டில் இருக்கும் போது அப்பகுதியை சேர்ந்த சிலர் கலாவின் வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டியுள்ளனர். காயமடைந்த கலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/