scorecardresearch

காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக் கொலை… பெண் வீட்டார் வெறிச் செயல்

கிருஷ்ணகிரி அருகே ஜெகன் என்ற இளைஞர் பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த நிலையில், பெண் வீட்டார் அவரை நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Krishnagiri, Honour killing, youth murder, lover marriage, காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை., பெண் வீட்டார் வெறிச்செயல், A young man hacked to death, who did love marriage in Krishnagiri
படுகொலை செய்யப்பட்ட இளைஞர் ஜெகன்

கிருஷ்ணகிரி அருகே ஜெகன் என்ற இளைஞர் பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த நிலையில், பெண் வீட்டார் அவரை நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை காதலித்து வந்துள்ளார்.இருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஜெகன் – சரண்யா காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், காதல் திருமணம் செய்த ஜெகன் கே.ஆர்.பி. அணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பெண்ணின் குடும்பத்தினர் ஜெகனை நடுரோட்டில் கழுத்து அறுத்து படுகொலை செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.

காதல் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் நடு ரோட்டில் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்.பி. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இதனிடையே, காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் தந்தை சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது அவர், காதல் திருமணம் செய்து கொண்ட தனது மகளின் கணவரை கொலை செய்ததாகவும் காதல் திருமணத்தால் விரக்தியில் கொலை செய்ததாகவும் நீதிமன்றத்தில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: A young man hacked to death for who did love marriage in krishnagiri