அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ தற்கொலை.. குடும்ப பிரச்னை காரணமா?
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி என்ற பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். பட்டதாரி இளைஞரான அருண் குமார், கடந்த சில மாதங்களான ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தார் எனக் கூறப்படுகிறது. இதில் அவர் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் டிச.22ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அருண் குமாரை காணவில்லை.
Advertisment
தற்கொலை தீர்வல்ல
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்று அடையாள தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டதில், அது அருண் குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து உடலை மீட்டு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.1 லட்சம் வரை இழந்திருப்பதாக தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/