கடற்கொள்ளையர்களின் கதையை கருவாகக் கொண்ட படத்தின் இசையை இசைத்து தன் இசையின் மூலம் பொதுமக்களின் மனதை வருடிய இசைப்பிரியர் டாபிரின்.
கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டாபிரின். இவர், பல்வேறு இசைக்கச்சேரியில் வயலின் இசை அமைத்து வருகிறார்.
இந்த நிலையில் கணபதி பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி வீடு ஒன்றில் (“Pirates of the Caribbean”) கடற்கொள்ளையர்களின் கதை கருவாகக் கொண்ட ஆங்கில படத்தின் பின் இசையை (“bgm”) இசைத்து மணமகளை இவர் வாழ்த்தினார்.
இந்த இசை அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது அவர் இசைத்த இசை அங்கிருந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“