வீட்டு மின் இணைப்பு உடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள, நிலையில் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால் மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறி விடுமா என எழுந்துள்ள சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் மின்வாரியம் பதில் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்பு உடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதனால், வீட்டு மின் இணைப்பு எண் உடன் விட்டில் வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை மின் இணைப்பு வாடகைக்கு இருக்கும் நபரின் பெயருக்கு மாறிவிடுமா என்று வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை வீட்டு மின் இணைப்பு எண் உடன் இணைத்தால் அவரது பெயருக்கு மின்இணைப்பு மாறாது என்றும் வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய முடியும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.
வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் மட்டுமே வாடகைக்கு வீட்டில் உள்ளவர்கள் மின் இணைப்பில் தங்களது ஆதார் பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் வாடகைதாரர் மாறும் போது புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
மேலும், ஒரு ஆதார் எண்ணை அனைத்து மின் இணைப்புகளுக்கும் இணைக்க முடியும் என்றும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்து மட்டுமே ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் மின்வாரியத் துறை அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”