தமிழகத்தில் மின் இணைப்பு உடன் ஆதார் இணைக்க வேண்டும் என்பது இ.பி-யில் மட்டுமல்ல , 7 துறைகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புகள் உடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும் இதில் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இ.பி. மட்டுமல்ல, தமிழகத்தில் 7 துறைகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று, பின்னர், இளங்கலை, பட்டயப்படிப்புப்பு என உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெற ஆதார் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
4 வித திருஅன் உதவித் திட்டங்களில் பட்டதாரி பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை, இதர பெண்களுக்கு ரூ.25,000 உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்க காசு பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அரசு கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்ச விலை அடிப்படையில், நெல் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்படும் 53 வகையான மத்திய, மாநில அரசின் விவசாய உதவித் திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடை கால உதவித்தொகை உள்ளிட்ட 21 வகையான நலத்திட்டங்களைப் பெற மீனவர்களுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் 73 வகையான நலத்திட்டங்களும் மூலம் அளிக்கப்படும் உதவிகளைப் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால், இ.பி. மட்டுமல்ல இப்படி 7 துறைகளில் நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் கட்டயம். அதனால், மக்களே உஷார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”