ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது டிசம்பர் 14 வரை நீட்டித்து ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்ய நாளை மறுநாள் (செப்.14) வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 மாதங்களுக்கு டிசம்பர் 14 வரை நீட்டித்து ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது அவசியமானது. அந்த வகையில் ஆதாரின் Demographic தரவுகளை செப்டம்பர் 14 வரை கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆதார் ஆணையம் அறிவித்தது. இதற்கு ரூ.50 கட்டணம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் இந்த கால அவகாசத்தில் புதுப்பிப்பு செய்தால் கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடைசி தேதி நெருங்கும் நிலையில் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் ஆதார் விவரங்களை புதுப்பிக்க கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஆதார் ஆணையம் டிசம்பர் 14 வரை கால நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil