மின் இணைப்பு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின்வாரிய அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உட்கார இறுக்கை, இடம் சாமியான பந்தல் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என மின்சார வாரியம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மின்சாரப் பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு உடன் ஆதார் எண் இணைப்பதில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு, மின் நுகர்வோர் மின் வாரிய அலுவலகத்திற்குச் செல்லும்போது, ஆதார் இணைக்கும் பணி குழப்பம் இல்லாமல் இருக்க, தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) நிலையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் நடைபெற்ற சிறப்பு முகாமை திங்கள்கிழமை ஆய்வு செய்தார். செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தல்படி, மின்வாரிய துறை இயக்குநர் அலுவலகம் கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
1) மின் இணைப்பு உடன் ஆதார் எண்ணை இணைக்க வருபவர்களுக்கு போதுமான இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
2) மேலும், இருக்கைகள் தேவைப்பட்டால், அவர்களுக்கு இருக்கை ஏற்பாடுகளுக்கு ஷாமியானா பந்தல் செய்து தரலாம்.
3) பொதுமக்களை வரவேற்று மின் இணைப்பு உடன் ஆதார் இணைப்பது குறித்து, ஆதாரை இணைக்கும் செயல்முறையை விளக்குவதற்கும் சிறப்புக் கவுன்ட்டருக்கு ஒரு TA/CA/CI நிலைப் பணியாளர் பிரத்தியேகமாக நியமிக்கப்பட வேண்டும்.
4) தற்போதுள்ள கணினி போதுமானதாக இல்லை என்றால் அல்லது கணினியின் செயல்பாடு மிகவும் மெதுவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டால், கூடுதல் கணினியை இணைத்துக்கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ஆதார் எண்ணை இணைக்கும் வேலை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
5) மின் இணைப்பு உடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு மின் நுகர்வோரிடம் இருந்தும் எந்த ஒரு ஊழியர்களாலும் பணம் வசூலிக்கப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகப் பிரிவு அலுவலர்களின் பொறுப்பாகும். இது தொடர்பாக புகார்கள் வந்தால், அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”