/indian-express-tamil/media/media_files/2025/01/13/WME843UNH8c1VzLvnafG.jpg)
Aadi month Spiritual journey Senior citizens Amman temples Tamil Nadu government
தமிழர்களின் வாழ்வில் ஆன்மீகப் பெருமிதத்துடன் போற்றப்படும் ஆடி மாதம், தெய்வங்களுக்கான சிறப்பு மாதமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப் பிறப்பு தொடங்கி மாதம் முழுவதும், கோவில்களில் தினந்தோறும் சிறப்பு பூஜைகளும், சடங்குகளும் நடைபெற்று, பக்தர்கள் வெள்ளத்தில் திளைக்கின்றன. குறிப்பாக, அம்மனுக்கு உகந்த இந்த மாதத்தில், தமிழகமெங்கும் உள்ள அம்மன் திருக்கோவில்களில் கொடைத் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்குகின்றன.
ஆன்மீகப் பயணம்: மூத்த குடிமக்களுக்கான அரசின் அரிய சேவை
ஆடி மாதத்தின் தெய்வீகப் பொலிவை மேலும் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மீகப் பயணமாக அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த அரிய வாய்ப்பு, ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. வரும் ஜூலை 18, ஜூலை 25, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளில் இந்தப் புனிதப் பயணம் தொடங்கப்படவுள்ளது. ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, ஜூலை 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.