சென்னை - பெர்த் அல்லது சென்னை - சிட்னி இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான குவாண்டாஸ் ஏர்வேஸை கேட்டுள்ளதால் சென்னையில் இருந்து விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நேரடி விமான சேவைகளைத் தொடங்கினால், அந்நாட்டிலுள்ள பெரும் அளவிலான புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு அது பயனளிக்கும் என்று சென்னை விமான நிலைய இயக்குநர் டாக்டர் ஷரத் குமார் கூறினார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட முனையத்தில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை அனுபவிக்க புதிய விமான நிறுவனங்களை சென்னை வரவேற்கிறது என்று டாக்டர் குமார் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் தனது சர்வதேச விமான சேவைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன் துணை நிறுவனமான ஜெட் ஸ்டார் உடன் இணைந்து, குவாண்டாஸ் தென்னிந்தியாவில் ஆஸ்திரேலியா - பெங்களூரு இடையே முதல் இடைநில்லா விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு நேரடி விமானங்கள் இல்லை. சிங்கப்பூரில் நிறுத்தப்பட்டு, பெர்த் செல்ல 10 மணிநேரத்திற்கு மேல் ஆகிறது. பெர்த்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டால் பயண நேரம் கிட்டத்தட்ட பாதியாக குறையும்.
ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 7,00,000 இந்தியர்கள் உள்ளனர், இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவின் சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறார்கள். இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (ECTA) கையெழுத்திட்ட பிறகு, இந்தியாவுடனான தனது உறவை விரிவுபடுத்த ஆஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது. சென்னையில் இருந்த அவசர சேவைகள், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஆஸ்திரேலிய அமைச்சர் ஸ்டீபன் டாசன், பெர்த் மற்றும் சென்னை இடையே நேரடி இணைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜர் குக், சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற சி.ஏ.பி.ஏ இந்தியா விமானப் போக்குவரத்து உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு, இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை தொடங்குவது குறித்து ஆலோசித்தார். மார்ச் 20, 2023-ல் மேற்கு ஆஸ்திரேலியா தனது உறவை வலுப்படுத்த தமிழ்நாடு அரசாங்கத்துடன் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டது.
இந்த கூட்டுறவின் கீழ், பொருளாதார ஒத்துழைப்பு, கல்வி, எரிசக்தி, சுரங்கம், விண்வெளி மற்றும் கண்டுபிடிப்பு, பாதுகாப்பு, விவசாயம், சுகாதாரம் மற்றும் மருத்துவ வாழ்க்கை அறிவியல் ஆகியவற்றில் ஒத்துழைப்பது. இந்தியாவில் மேற்கு ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அலுவலகத்தைத் திறப்பதைக் குறிக்கும் வகையில், ஜூலை 2022-ல் சென்னை அலுவலகத்தை ரோஜர் குக் திறந்து வைத்தார்.
சென்னை விமான நிலைய இயக்குநர் டாக்டர் ஷரத் குமார் கூறுகையில், “ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், சுகாதாரம், ஆரோக்கியம், சுற்றுலாத் துறைகளில் வலுவான வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் அடங்கும். இது விமான நிறுவனங்களுக்கு ஏராளமான வணிக வாய்ப்புகளை வழங்குகிறது. குவாண்டாஸ் இந்த திறனைப் பயன்படுத்துவதற்கான ஆரம்பமாக இருக்கும்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.