Advertisment

இண்டீரியர் மின்விளக்கு சோதனை; ஜொலித்த சென்னை விமான நிலைய புதிய கட்டிடம்

சென்னை விமான நிலையத்தில், கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் பல்வேறு உபகரணங்களை நிறுவி இண்டீரியர் மின்விளக்குகளை எரியவிட்டு விமான நிலையம் ஆணையம் சோதனை செய்தது.

author-image
WebDesk
New Update
Chennai Airport, AAI, Tests interior lighting in Chennai Airport, இண்டீரியர் மின்விளக்கு சோதனை, ஜொலித்த சென்னை விமான நிலையம் புதிய கட்டிடம் , சென்னை விமான நிலையம், மின்விளக்கு சோதனை, AAI Tests interior lighting in Chennai Airport, New Integrated Terminal building

சென்னை விமான நிலையத்தில் கட்டுமானப் பணிகள் ஓரளவு முடிந்த நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில் உள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் பல்வேறு உபகரணங்களை நிறுவி இண்டீரியர் மின்விளக்குகளை எரியவிட்டு சோதனை செய்தது. இதனால் சென்னை விமான நிலையம் மின்விளக்குகளால் ஜொலித்தது.

Advertisment

சென்னை விமான நிலையத்தில் இரண்டு தளங்களிலும் மின்விளக்கு அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால், இண்டீரியர் மின்விளக்குகள் மற்றும் இதர பணிகளை சோதனை செய்யும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலைய முனையத்தின் வருகைத் தளத்தில் உள்ள மின்விளக்குகள் சோதனை நிலையில் எரியவிடப்பட்டு வருகிறது.

சென்னையில் 2வது விமான நிலையம் எங்கே எப்போது அமையப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை விமான நிலையத்தில், இன்லைன் பேக்கேஜ் ஸ்கேனிங் சிஸ்டம், பேக்கேஜ் கன்வேயர், செக் இன் கியோஸ்க் உள்ளிட்ட பயணிகளின் வசதிகளுக்கான இயந்திரங்களை நிறுவும் பணி நடந்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் பயனிகள் வசதிகளுக்காக நிறுவப்படும் இந்த உபகரணங்கள் நிறுவி முடித்ததும் சோதனை செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில், முதல் தளத்தில் கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதால் மின் சாதனங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவுதல் மற்றும் சோதனை செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சோதனைகள் அனைத்தும் எளிதாக செயல்படுத்த உதவும் என்று தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் தனிந்து, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சரக்குகளை இயக்குவது இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதால், எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள் மற்றும் பேக்கேஜ் டிராலிகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் போது, ​​10 பேக்கேஜ் கன்வேயர்கள், 38 தானாக செயல்பட்டு அனுமதிக்கும் இயந்திரம், 38 லிப்ட்கள், 46 எஸ்கலேட்டர்கள், 12 நடந்து செல்லும் லிஃப்ட்கள், மற்றும் 100க்கும் மேற்பட்ட செக் இன் கவுண்டர்கள் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். முகத்தை அடையாளம் காணும் அடிப்படையிலான டிஜி யாத்ரா உள்ளிட்ட பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி பயணிகள் அனுமதிக்கவும், விமானங்களில் ஏறவும் உதவும் தானியங்கி அமைப்புடன் டெர்மினல் பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் கூடுதல் சோதனைகள் தேவைப்படலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பயணிகளின் ஓட்டத்தைக் கண்காணிக்கவும், முனையத்தில் நெரிசலைக் கணிக்கவும் சென்சார்கள் நிறுவப்படுகிறது என்று தெரிவித்தனர்.

விமான நிலையத்தின் தரைத்தளத்தில் ஓடுகள் பதிக்கப்பட்டு, சுவர் விளக்குகள் பொருத்தப்பட்டு, வருகை முனையத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த டெர்மினல் இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

விமான நிலைய ஆணையம், சர்வதேச வருகை முனையத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்ற உள்ளது. இந்த கட்டிடம் சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ. 2,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம், விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் திறனை ஆண்டுக்கு 21 மில்லியன் பயணிகளில் இருந்து 35 மில்லியன் பயணிகளாக உயர்த்தும் என்று தெரிவிக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment