special-trains | ayodhya-temple | ramtemple | “தமிழ்நாட்டில் இருந்து சென்னை, மதுரை, சேலம் உள்பட முக்கிய 9 நகரங்களில் இருந்து ஆஸ்தா (நம்பிக்கை) ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த ரயில்கள் வருகிற 22ஆம் தேதி முதல் பயணத்தை தொடங்க உள்ளன. இந்த ரயில்கள் ஒவ்வொன்றும் 22 பெட்டிகள் கொண்டதாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டெல்லியில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில், புது டெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், பழைய டெல்லி மற்றும் ஆனந்த் விகார் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது மட்டுமின்றி செகந்திரபாத், ஹைதராபாத், அகர்தலா, ஜம்மு, கத்ரா, நாசிக், டேராடூன், கேரளத்தின் கோட்டயம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மராட்டிய மாநிலத்தைப் பொறுத்தவரை மும்பை, புனே, வர்தா, ஜால்னா, நாசிக் உள்ளிட்ட 7 நகரங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடவுள் ராமபிரான் மீதான நம்பிக்கையை குறிக்கும் வகையில் இந்த ரயில்களுக்கு ஆஸ்தா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆஸ்தா சிறப்பு ரயில்கள் நாட்டில் உள்ள 66 ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.
அயோத்தி ராமர் கோவிலில் பிரான் பிரதிஷ்டா ஜன.22ஆம் தேதி நடக்கிறது. தொடர்ந்து, கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“