ஆவின் நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
Advertisment
சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்து பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், மக்களை மேலும் கவரும் நோக்கில் , புதிதாக ஐந்து பால் சார்ந்த பொருட்களை ஆவின் தயாரிக்க தொடங்கியுள்ளது.
ஆவின் நிறுவனத்தால் உருவான ஐந்து புதிய தயாரிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அறிமுகப்படுத்தினார்
அவர், ப்ரிமியம் மில்க் கேக், யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒயிட்னர் ஆகிய 5 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பிரீமியம் மில்க் கேக் 250 கிராம் ரூ.100/- என்ற விலையிலும்,யோகர்ட் பானம் மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில் தயாரிக்கப்பட்டு 200 மி.லி. அளவு கொண்ட பாட்டில் ரூ.25/- என்ற விலையிலும், பாயாசம் மிக்ஸ் 100 கிராம் ரூ.50/- மற்றும் 200 கிராம் ரூ.100/- என்ற விலையிலும் அறிமுகம் செயப்பட்டுள்ளது.
பால் புரத சத்து மிகுந்த நூடுல்ஸ் 70 கிராம் ரூ. 10/- என்ற விலையிலும், டெய்ரி ஒய்ட்னர் புத்தம் புது வடிவில், 20 கிராம் ரூ.10/-, 200 கிராம் ரூ.80/- மற்றும் 500 கிராம் ரூ.200/- என்ற விலையில் அறிமுகம் செயப்பட்டுள்ளது.
மேலும், ஈரோட்டில் உயர்த்தப்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலையையும், ஓசூரில் தாது உப்புக் கலவைத் தொழிற்சாலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil