Aavin : தீபாவளிக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் ஆடை மற்றும் இனிப்பு விற்பனை நிலையங்களில் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து, பெரும்பாலானோர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட நிலையில் தொடர்ந்து வர்த்தக செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் திங்கள் கிழமை அன்று ஆவின் பால் விற்பனையகத்தில் விற்பனைக்கு வைக்கப்படுவதற்காக ஐந்து புதிய இனிப்பு பண்டங்களை அறிமுகம் செய்து வைத்தார்.
காஜூ கட்லி - 250 கிராம் - ரூ. 225
நட்டி மில்க் கேக் - 250 கிராம் - ரூ. 210
மோத்தி பாக் - 250 கிராம் - ரூ.170
காஜூ பிஸ்தா ரோல் - 250 கிராம் - ரூ. 270
காஃபி மில்க் பர்ஃபி - 250 கிராம் - ரூ. 210
மேலே கூறப்பட்டுள்ள இந்த இனிப்பு பண்டங்களுக்கு இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த 5 இனிப்புகள் அடங்கிய 500 கிராம் காம்போ பாக்ஸை ரூ. 425க்கு பெற்றுக் கொள்ளவும் முடியும்.
கடந்த ஆண்டு 15 டன் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் ஆவினிக்கு 1.2 கோடி லாபம் கிடைத்தது என்றும், இந்த ஆண்டு ஆவின் 25 டன் இனிப்புகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2.2 கோடி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி கடந்த ஆண்டு விற்பனையைக் காட்டிலும் 50% கூடுதலாக இனிப்புகளை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil