Tamil Nadu News: ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பால், தயிர், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களின் எண்ணிக்கை தற்போது 225 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் அல்லது பிரபலமாக அறியப்படும் ஆவின், சந்தையில் நியாயமான பங்கைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை 10 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
நந்தனத்தில் டி.சி.எம்.பி.எப். லிமிடெட் நிர்வாக இயக்குநர் என்.சுப்பையன் மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்புகளை மாநில பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடந்த மார்ச் மாதமே, பத்து தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருந்ததாக அமைச்சர் கூறினார். அதன்படி அம்பத்தூர் மற்றும் ஊட்டியில் உள்ள இரண்டு ஆவின் பால் பண்ணைகளில் உற்பத்தி தொடங்கியுள்ளது.
புதிய தயாரிப்புகளான பலாப்பழம் ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், குளிர்ந்த காபி, பட்டர் சிப்லெட்கள், பாசுண்டி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பதப்படுத்தப்பட்ட சீஸ், வேகவைத்த தயிர், ஆவின் பால் பிஸ்கட் மற்றும் ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகியவற்றின் விற்பனை மூலம் மாதாந்திர லாபம் ரூ. 2 கோடி வரக்கூடும் என அமைச்சர் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil