Advertisment

குடிநீர் இல்லை; கரண்ட் இல்லை; ஆவின் பால் இல்லை: சென்னையில் திண்டாடும் மக்கள்; ஸ்டாலின் கவனிப்பாரா?

சென்னையில் இன்று மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

author-image
WebDesk
Jun 01, 2023 11:54 IST
aavin, water supply, power cut

சென்னையில் மூன்று நாட்களுக்கு முன்பு, (மே 29ஆம் தேதி) தி நகரில் உள்ள சில பகுதிகளில் திடீரென அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் டிப்போவிற்கு சென்றன.

Advertisment

தனியார் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியமர்த்தப் படுவதால் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் மந்தைவெளி, ஆவடி, தி.நகர், பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள டிப்போவிற்கு பேருந்துகளை கொண்டுசென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியதை அடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை வாபஸ் பெற செய்தனர்.

இதைத்தொடர்ந்து, சென்னையில் இன்று மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆவின் பாலின் கொள்முதல் குறைந்துள்ளதால் சென்னை மாதவரம் மத்தியபால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு பால் வரத்து குறைந்துள்ளது.

இதனால், சென்னை சோழிங்கநல்லூர், காக்களூர் பண்ணைகளில் மூன்றாவது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி அளவிலும் கூட, பால் பாக்கெட்டுகள் வாகனங்களில் ஏற்றப்படாமல் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் பால் சரியான நேரத்தில் விநியோகிக்கப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் உள்ள மூன்று பண்ணைகளிலும் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்த பட்டிருப்பதாகவும், போதிய அளவிற்கு ஊழியர்கள் இல்லாத காரணத்தினாலும் பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிகுப்பம், புதூர், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின் தடை குறித்து பொதுமக்கள் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க முயற்சித்தபோது யாரும் பதிலளிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால், கள்ளிகுப்பதில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சில மணி நேரம் போராட்டம் நீடித்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, அங்கு அம்பத்தூர் போலீசார் வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில், சென்னை ஆர்.ஏ.புறத்தில் நான்கு நாட்களாக மெட்ரோ வாட்டர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் இன்று காலை 7 மணி முதல் வர தொடங்கியது. தொடர்ச்சியாக 5 மணி நேரம் தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் குடிநீர் வாரியத்திற்கு கோரிக்கை வைத்ததை அடுத்து, மெட்ரோ வாட்டர் விநியோகம் இன்று தொடங்கியது.

சென்னையில் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்னைகள் கடந்த இந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Aavin #Tangedco #Water #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment