Advertisment

ரூ.10க்கு ஆவின் பால் பாக்கெட்: இன்று முதல் விற்பனை

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் மே 9ஆம் தேதி சென்னையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 500 மிலி ஆவின் டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Aavin

ரூ.10க்கு ஆவின் பால் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ.10க்கு 200 மிலி ஆவின் டிலைட் பால் இன்று (டிச.1) முதல் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது

இது குறித்து, ஆவின் மேலாண்மை இயக்குனர் வினீத் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,“பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் மே 9ஆம் தேதி சென்னையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 500 மிலி ஆவின் டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது ஆவின் 500 மிலி டிலைட் பால் ரூ21 விலையில் மாதாந்திர பால் அட்டைகள் வருகிற டிசம்பர் மாதம் முதல் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ.10க்கு 200 மிலி ஆவின் டிலைட் பால் இன்று (டிச.1) முதல் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது எனவும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Aavin Milk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment