பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விஞ்ஞான ரீதியாக பால் விற்பனை விலையை உயர்த்தும் ஆவினின் முடிவு கண்டிக்கத்தக்க செயல் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் ஆவின் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (ஆரஞ்சு கலர் பாக்கெட்) விநியோகத்தை குறைத்து "மேலிடத்து உத்தரவு" என்கிற பெயரில் சென்னையில் கடந்த சில வாரங்களாக செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கிய ஆவின் நிர்வாகம் தற்போது அதற்கு இணையான "டீ மேட்" பாலினை ஒரு லிட்டருக்கு 12.00ரூபாய் அதிக விலையில் அறிமுகப்படுத்தி அதனை விற்பனை செய்ய பால் முகவர்களை நிர்பந்தம் செய்து வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் விஞ்ஞான ரீதியாக பால் விற்பனை விலையை உயர்த்தும் ஆவினின் முடிவு கண்டிக்கத்தக்க செயலாகும்.
கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (ஆரஞ்சு கலர் பாக்கெட்) 500மிலி 24.00ரூபாய்
(Fat 6% - SNF 9%). டீ மேட் பால் 500மிலி 30.00ரூபாய் (Fat 6.5% - SNF 9%)
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.