scorecardresearch

ஆரஞ்சு பால் விலை இன்று முதல் உயர்வு: ஆவின் நிறுவனம் அறிவிப்பு

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஆரஞ்சு பால் விலை இன்று முதல் உயர்வு: ஆவின் நிறுவனம் அறிவிப்பு

ஆரஞ்சு நிற ஆவின் உறையில் விற்கப்படும் நிறைக்கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டிருப்பதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆவின் பால் விலை குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் ,” ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட செய்தி குறிப்பினை தொடர்ந்து, (நவம்பர் 5ஆம் தேதி) இன்று முதல் பசும் பால் கொள்முதல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.32 லிருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 41 லிருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோரின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட ஆவின் நீல நிறம் பால் பாக்கெட் மற்றும் பச்சை நிறம் பால் பாக்கெட் ஆகியவற்றின் விலையில் தற்போதைக்கு மாற்றம் இல்லை என்று கூறப்படுகிறது.

தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் லிட்டருக்கு ரூ.46 புதுபிக்கப்படும். சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ.60ஆக இன்று முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.

பசும்பால் விலை எருமைப்பாலின் விலையை ரூ.51 ஆகவும், பசும்பாலின் விலையை ரூ.44 ஆகவும், லிட்டருக்கு ரூ.10 உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை விட ரூ. 7 குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் நிற பால் நீல உறை போல பச்சை நிற உறைகளில் வரும் பாலின் விலை உயர்த்தப்படாததும் வரவேற்கத்தக்கதே. ஆனால், ஆரஞ்சு நிற உறையில் சில்லறையில் விற்கப்படும் நிறைக்கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கிறது.

பெரும்பாலான மக்கள் சில்லறை கடைகளில் தான் பால் வாங்குகின்றனர் என்பதால் ஆரஞ்சு பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Aavin orange milk packet price hiked from today 05th november