scorecardresearch

ஆவின் அட்டையுடன் ரேஷன் கார்டு இணைக்க உத்தரவு: அடுத்த அதிரடி

ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.

ஆவின் அட்டையுடன் ரேஷன் கார்டு இணைக்க உத்தரவு: அடுத்த அதிரடி
Aavin-MILK

ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால், கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது.

சமீபத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் பால் பாக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. அதன்படி ஆரஞ்சு பாக்கெட் பால் சில்லறை விலையில் 60 ரூபாய்க்கும், சிகப்பு பாக்கெட் பால் 76 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் 46 ரூபாய்க்கு பால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால் முறைகேடுகளைத் தடுக்க மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

27 மண்டலங்களில் இணையதளத்தின் மூலமாக இந்தப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Aavin orders to link aavin milk card with ration card