கள்ளச் சந்தையில் பால் விற்றால் உரிமம் ரத்து: மனோ தங்கராஜ் எச்சரிக்கை

ஆவின் பாலை கள்ளச் சந்தையில் விற்றாலோ, அதிக விலைக்கு விற்றாலோ முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என மனோ தங்கராஜ் எச்சரிக்கை

ஆவின் பாலை கள்ளச் சந்தையில் விற்றாலோ, அதிக விலைக்கு விற்றாலோ முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என மனோ தங்கராஜ் எச்சரிக்கை

author-image
WebDesk
New Update
Minister Mano Thangaraj says TN Govt plan to hike milk procurement price

ஆவின் பாலை கள்ளச் சந்தையில் விற்றாலோ, அதிக விலைக்கு விற்றாலோ முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில், வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  

Advertisment

அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆவன் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் பாலை கள்ளச் சந்தையில் விற்றாலோ, அதிக விலைக்கு விற்றாலோ முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "இன்று (டிச.7) காலை அனைத்து முகவர்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்.பால் வினியோகத்தை நேரடியாக கண்காணித்து ஒவ்வொரு பகுதிக்கும் வாகனங்கள் மூலமாக பால் அனுப்பப்பட்டு வருகிறது. 

Advertisment
Advertisements

தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் வினியோகிக்கப்பட்டுள்ள நிலையில் ஆவின் பாலை பொது மக்களுக்கு வழங்காமல் கள்ளச் சந்தையில் விற்கவோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு முகவர் உரிமமும் ரத்து செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aavin Milk Mano Thangaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: