ஆவின் பால் விலை திடீர் உயர்வு; ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

ஆவின் பால் விலை 50 காசுகள் உயர்ந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 200 மில்லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்ந்துள்ளது.

ஆவின் பால் விலை 50 காசுகள் உயர்ந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 200 மில்லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Aavin Milk

ஆவின் பால் விலை 50 காசுகள் உயர்வு; ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

ஆவின் பால் விலை 50 காசுகள் உயர்ந்துள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 200 மில்லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்ந்துள்ளது.  

Advertisment

தமிழ்நாட்டில் பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கமான ஆவின்  ஈடுபட்டு வருகிறது.  கடந்த ஆகஸ்ட் மாதம் 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்தது.

5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.210-க்கு விற்பனையாகி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி  ரூ.10 விலை உயர்த்தப்பட்டு ரூ. 220-க்கு விற்பனையானது.  ஆவின் பால் விலை உயர்வால் டீக்கடை, உணவகங்கள் பாதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பிங்க் நிறத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் ஆவின்  நிர்வாகம் மாற்றலாம் எனவும் தகவல் வெளியாகியது.

Advertisment
Advertisements

இந்த நிலையில் தற்போது ஆவின் பால் விலை திடீரென உயர்ந்துள்ளது.  அதன்படி 200 மில்லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்ந்துள்ளது.  அதேபோல  வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200 மில்லி ஆவின் பால் இன்று முதல் ஊதா நிற ( Violet) பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aavin Milk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: