Advertisment

குலோப் ஜாமுன், பால்கோவா... ஆவின் ஸ்வீட்ஸ் விலையும் திடீர் உயர்வு

Tamil Nadu News: ஆவின் நிறுவனம் வெளியிடும் இனிப்பு வகைகளின் விலை இன்று முதல் அதிகரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குலோப் ஜாமுன், பால்கோவா... ஆவின் ஸ்வீட்ஸ் விலையும் திடீர் உயர்வு

Tamil Nadu News: ஆவின் நிறுவனம் வெளியிடும் இனிப்பு வகைகளின் விலை இன்று முதல் அதிகரிக்கிறது.

Advertisment

கடந்த ஜூலை மாதம், ஆவின் நிறுவனம் தனது தயாரிப்புகளான தயிர், நெய் போன்ற பொருட்களில் விலை உயர்த்தியது. அதே போல, தற்போது தனது இனிப்பு வகைகளிலும் விலை உயர்த்தி அறிவித்துள்ளது.

publive-image

ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விலையின் பட்டியல்:

125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.45 லிருந்து ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது, 250 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.80 லிருந்து ரூ. 100 ஆக உயர்ந்துள்ளது, 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.40 லிருந்து ரூ.45 ஆக உயர்ந்துள்ளது, 200 கிராம் ரசகுல்லா விலை ரூ.80 லிருந்து ரூ.90 ஆக உயர்ந்துள்ளது.

100 கிராம் பால்கோவா விலை ரூ.47 லிருந்து ரூ.55 ஆக உயர்ந்துள்ளது, 250 கிராம் பால்கோவா விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது, 500 கிராம் மைசூர்பாகு விலை ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்ந்துள்ளது, 250 கிராம் மைசூர்பாகு விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு என்று அறிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Aavin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment