மக்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், ஆவின் நிறுவனம், அஸ்வகந்தா மற்றும் சுக்கு மல்லி பால், மஞ்சள் பால் ஆகிய மூன்று புதிய ரகங்களை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கூட்டமைப்பின் சார்பில், 2024-25-ம் ஆண்டுக்கான, சட்டப்பேரவை திட்டங்களை செயல்படுத்தும் வகையில், சென்னை நந்தனத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பயிற்சி பெற்ற களப்பணியாளாகளுக்கு, பால் சேகரிக்கும் மற்றும் பரிசோதிக்கும் கருவிகள், பசுந்தீவன புல் ரேக், பாரம்பரிய கால்நடை மருத்துவம் ஆகியவற்றில், சான்றிதழ் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு மூலிகை மருந்துகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பால் கடைகளில் ஊட்டச்சத்து டானிக் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பேசிய பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். பெருநகரப் பகுதியில் பால் விற்பனையை 20% உயர்த்துவதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் பால் விநியோக இலக்கை வெற்றிகரமாகச் சாதித்ததைத் தொடர்ந்து மூலிக்கை பால் விற்பனை செய்யும் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஆவின் பால் மற்றும் இதர பால் பொருட்களின் உற்பத்தியாளரான தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (TNCMPF) பால் விற்பனையை 20% அதிகரிக்க ஒரு பெரிய இல்க்கை நிர்ணையித்துக்கொண்டது. இந்த முயற்சி படிப்படியாக அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 15 லட்சம் லிட்டர் பால் விநியோகத்தை எட்டியுள்ளது என்று பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் "நாங்கள் கொள்முதல் செய்வதிலிருந்து விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் உத்திகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சாத்தியமான பகுதிகளை அடையாளம் காண தேவையான திறன்களுடன் மார்க்கெட்டிங் பணியாளர்களை சித்தப்படுத்துவதற்கான பயிற்சி திட்டங்கள் நடந்து வருகின்றன.
வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஆவின் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் நோக்கில் மூலிகை பால் மற்றும் சுக்கு மல்லி பால், மஞ்சள் பால் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அமுதம் மற்றும் ரேஷன் கடைகளில் பால் பொருட்களின் விற்பனையை விரிவுபடுத்தவும் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
பருவமழையின் பாதிப்பு போது ஏற்படக்கூடிய பால் தட்டுப்பாடு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய, கடந்த ஆண்டு இதேபோன்ற சவால்களை வெற்றிகரமாக சமாளித்து ஆவின் நன்கு தயாராக இருக்கிறது. தற்போது, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கூட்டமைப்பு, தினசரி 36-37 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது, இது கடந்த ஆண்டை விட 10 லட்சம் லிட்டர் அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் 1,25,000 மதிப்பிலான துருப்பிடிக்காத எஃகு பால் கேன்கள், பால் அளக்கும் கருவிகள் மற்றும் பால் பதப்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட நான்கு நலத்திட்டங்களை பால் துறைக்கான தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.