ஆழியார் கவியருவி திறப்பு: ஆனந்த குளியல் போட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி 6 மாதத்துக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு செல்பி எடுத்து குதூகலம் அடைந்து வருகின்றனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி 6 மாதத்துக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு செல்பி எடுத்து குதூகலம் அடைந்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aazhiyaru Kaviyaruvi falls, Kaviyaruvi falls open Travellers and people happy bathing, ஆழியார் கவியருவி திறப்பு, ஆனந்த குளியல் போட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி, கோவை, ஆழியார், கவியருவி, பொள்ளாச்சி, Aazhiyaru Kaviyaruvi falls, Travellers and people happy bathing

ஆழியார் கவியருவி திறப்பு: ஆனந்த குளியல் போட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி 6 மாதத்துக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு செல்பி எடுத்து குதூகலம் அடைந்து வருகின்றனர்.

Advertisment

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியில் அமைந்துள்ளது கவியருவி. இங்கு உள்ள அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

கடந்த ஜனவரி மாதம் முதல் கோடை வறட்சி காரணமாக மூடப்பட்டிருந்த கவியருவி தற்போது திறக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக கவியருவிக்கு நீர்வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறை சார்பில் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதனை அடுத்து இன்று காலை முதலே கவி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தென்மேற்கு பருவ மழை துவங்கி இருந்தாலும் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் இந்த இதமான சூழ்நிலையை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுச்சூழலில் உள்ள நீர்வீழ்ச்சியுடன் செல்பி மற்றும் வீடியோக்கள் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி: பி. ரஹ்மான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: