Congress | Tamil Nadu | Dmk | 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கான ஏ.பி.பி. சி-வோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, தி.மு. கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழகத்தில் கைப்பற்றி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்), வி.சி.க, ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு தேச மக்கள் கட்சி ஆகியவை உள்ளன.
மக்களவைத் தேர்தல் 2024க்கான சமீபத்திய ஏ.பி.பி சி-வோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடங்களையும், திமுக கூட்டணி கட்சிகள் 31 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த கணிப்பு 2019 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களைப் பெற்ற அதேபோன்ற முடிவை பிரதிபலிக்கிறது.
மேலும், வாக்குப் பங்கின் அடிப்படையில், 54.7% சதவீதத்துடன் தி.மு.க முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, (அதிமுக) 27.8% வாக்குகளையும், பாஜக 11 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சிகள் 6.8% வாக்குகளைப் பெறும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் (AMMK) தனது கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“