அப்துல் கலாம் 5வது ஆண்டு நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைந்த 5வது ஆண்டு நினை நாளில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.

By: Updated: July 27, 2020, 02:06:20 PM

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைந்த 5வது ஆண்டு நினை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளனர்.

மக்கள் குடியரசுத் தலைவர், ஏவுக்கணை நாயகன் என்று கொண்டாடப்பட்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார். அப்துல் கலாம் இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்று கூறி ஊக்க சக்தியாக இருந்தவர்.

அப்துல் கலாம் மறைந்து 5வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அப்துல் கலாம் நினைவு நாளில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி தெரிவித்து புகழாரம் சூட்டியுள்ளனர்.

பிரதமர் மோடி, அப்துல் கலாம் நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார்.


துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான இன்று எனது தாழ்மையான அஞ்சலி.
அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி, சிறந்த மனிதர் மற்றும் அவர் ஒரு ‘மக்கள் குடியரசுத் தலைவர்’ ஆவார். அவர் நாட்டின் மக்களை, குறிப்பாக இளைஞர்களை தனது செயல்கள் மற்றும் சொற்களின் மூலம் ஊக்கப்படுத்தினார்.” என்று குறிப்பிட்டு அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தி புகழாரம் சூட்டியுள்ளார்.


அப்துல் கலாமுக்கு அஞ்சலி தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது ட்விட்டர் பக்கத்தில், “அறிவு, ஞானம் மற்றும் எளிமை ஆகியவற்றின் வடிவமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி. அவர் ஒரு மக்கள் குடியரசுத் தலைவர். அவர் விஞ்ஞானம் முதல் அரசியல் வரை பல துறைகளில் அழியாத தடங்களை விட்டுச்சென்றுள்ளார். அறிவிற்கான அவரது இடைவிடாத தேடலானது தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.


பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாளில் ட்விட்டரில் அஞ்சலி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளில் எனது மனமார்ந்த அஞ்சலி. அவர் ஒரு மக்கள் குடியரசுத் தலைவராக இருந்தார். அவருடைய சிறந்த வாழ்க்கை நாட்டின் மக்களுக்கு ஊக்கமளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


ஆம் ஆத் மி கட்சி தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மனிஷ் சிசோடியா அப்துல் கலா நினைவு நாளில் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் பலரும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 5வது ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி தெரிவித்து அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.


சுதர்சன் பட்நாய்க் என்ற மணல் சிற்பக் கலைஞர் புரி கடற்கரையில், அப்துல்கலாம் முகத்தை மணலில் சிற்பமாக வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Abdul kalam death anniversary tributes modi vengkaiah naidu amit shah

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X