Abdul Kalam Quotes in Tamil : இராமேஸ்வரம் முதல் சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அவுல் பகீர் ஜயினுலாப்தீன் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று.
அக்டோபர் 15ம் தேதி 1931ம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பிறந்த இவர், விண்வெளி பொறியியல் படித்து விஞ்ஞானியாக பணிபுரிந்து கொண்டிருந்தார். ஏவுகணை மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அவரின் பங்களிப்பு காரணமாக அவருக்கு ‘இந்தியாவின் மிசைல் மேன்’ என்ற பட்டம் சூட்டப்பட்டது.
Abdul Kalam Quotes in Tamil : அப்துல் கலாம் தமிழ் பொன்மொழிகள் :
அறிவியல் மட்டுமின்றி வாழ்க்கைக்கு உகந்த தத்துவம், பன்மொழிகளில் ஆற்றல் மற்றும் கலை என அனைத்திலுமே சிறந்தவராக திகழ்ந்தார். இவரின் பல திறமைகளுக்காகவும், விஞ்ஞான திறனுக்காகவும் பல பல்கலைகழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளது. அவர் 18 புத்தகங்களையும், 22 கவிதைகள் மற்றும் 4 பாடல்களும் எழுதியுள்ளார்.
27ம் தேதி ஆகஸ்டு மாதம் 2015ம் ஆண்டு, மெகாலயாவில் உள்ள சில்லாங் பகுதியில் கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் உரையாட சென்றபோது தனது இறுதி மூச்சை சுவாசித்தார். இத்தகைய மேதையின் பிறந்தநாளில் அவரின் பொன்மொழிகளில் சில உங்களுக்காக...