புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா குறித்து ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.
இதைப்பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது:
“திருவாடுதுறை, தர்மபுரி, மதுரை உள்பட 20 ஆதினங்கள் அழைக்கப்படுகிறார்கள். செங்கோலையில் பிரதமர் மோடி மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே உயர்ந்த இடத்தில் வைக்க இருக்கிறார்.
செங்கோலை தயாரித்த உம்மிடி சகோதர்களை பிரதமர் மோடி கவுரவிக்க உள்ளார். *நாடு சுதந்திரம் பெற்றதை குறிக்கிறது செங்கோல் பரிமாற்றம். ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் தற்போதும் பல நாடுகளில் அமலில் உள்ளது.
நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கபப்டுவதன் மூலம் தமிழுக்கும் தமிழருக்கும் பிரதமர் மோடி பெருமை சேர்க்கிறார். நாடாளுமன்றத்தை கட்டிய தொழிலாளர்களும் கவுரவிக்கப்பட உள்ளனர்”.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil