/tamil-ie/media/media_files/uploads/2023/09/OPS-Rajinikanth.jpg)
ரஜினிகாந்த் - ஓபிஎஸ்
முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்தியது.
சுமார் ஒரு மணி நேரம் ரஜினிகாந்த்தை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் பேசியிருந்தார். ரஜினிகாந்த் இமயமலை பகுதிகளுக்கு ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த வாரம் தான் வீடு திரும்பியிருந்தார்.
இதனால் இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்பட்டது. எனினும் இந்தச் சந்திப்பில் அரசியல் ரீதியாக எதுவும் பேசப்படவில்லை.
உச்சங்கள் பல தொட்டு அப்படி எட்டிய உச்சத்தில் இன்றளவும் சாஸ்வதமாய் நிலைத்து நிற்கும் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது... pic.twitter.com/OhqfNpcCuq
— O Panneerselvam (@OfficeOfOPS) September 2, 2023
மரியாதை நிமிர்தமான சந்திப்பு என்றே கூறப்பட்டது. ஆனாலும் இது தொடர்பாக ஓ. பன்னீர் செல்வம் எதுவும் பேசவில்லை. இதற்கிடையில் மதியம் நடந்த சந்திப்பு குறித்து இரவு 10.30 மணியளவில் ஓ. பன்னீர் செல்வம் ட்வீட் ஒன்று செய்திருந்தார்.
அந்த ட்வீட்டில் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து நெகிழ்ந்து பேசியிருந்தார். இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “உச்சங்கள் பல தொட்டு அப்படி எட்டிய உச்சத்தில் இன்றளவும் சாஸ்வதமாய் நிலைத்து நிற்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.