துபாயில் இருதய நோயால் ஒரு வருடங்களாக அவதிப்பட்டு வந்த ஏசி மெக்கானிக் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மதுக்கரை முஸ்லிம் காலனியைச் சேர்ந்தவர் பைரோஸ் கான் நவாப் ஜான் வயது 43 சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்று அங்கே ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருதய கோளாறு மற்றும் மூளை ரத்தக் கசிவு நோயால் துபாய் நாட்டில் என் எம் சி ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பொருளாதார ரீதியாக தொடர்ந்து சிகிச்சை பெற முடியாததால் இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து தமிழகத்தில் தனது சொந்த ஊரில் சிகிச்சை பெறுவதாக விரும்பினார்.
இந்திய தூதரக அலுவலக நண்பர் மூலம் கோவையைச் சார்ந்த சமூக ஆர்வலர் சுபி கிருஷ்ணன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
இது குறித்து தமிழக அமைச்சர் உதயநிதியிடம் துபாயில் சிகிச்சை பெற்று வரும் நபரை தமிழகத்திற்கு அழைத்து வர உதவி செய்யும்படி சுபி கிருஷ்ணன் கேட்டார் அமைச்சர் உதயநிதி உத்தரவின் பேரில் பொது துறை மற்றும் சுகாதாரத் துறை துபாய்
தமிழக அரசின் உடனடி நடவடிக்கையால் இன்று காலை பைரோஸ் கான் விமான மூலம் கொச்சி வந்தடைந்தார் கொச்சி விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது தாய் தந்தை மற்றும் மனைவி தம்பி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் சமூக ஆர்வலர் சுபி கிருஷ்ணன் மருத்துவமனை முதல்வரை சந்தித்து தமிழக அரசுக்கும் அரசு மருத்துவமனைக்கும் நன்றி தெரிவித்ததோடு சிறப்பான சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினரையும் கேட்டுக்கொண்டார்.
இருதய நோயால் பாதிக்கப்பட்ட பைரோஸ் கான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“