தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் உள்ள ராயவரம் மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதால் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
வருடந்தோறும் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கமானது ஆகும்.

அந்த வகையில் திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் பங்கேற்றது.
இப்போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். அப்போது காளையை அடக்க முயற்சி செய்த, புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பவர் காளை முட்டியதால் படுகாயமடைந்தார்.
இதில் அவரது குடல் சரிந்ததால் உடனடியாக மீட்புக் குழுவினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். காளை முட்டி மாடுபிடி வீரர் உயிரிழந்ததால், இந்த போட்டி நிறுத்தப்பட்டது.