”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்?

கமல், ரஜினி அரசியலில் இறங்கியுள்ள நிலையில், அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் சனிக்கிழமை சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ், “ஒரு பிரபல சினிமா நடிகராகவே இருப்பதாலேயே அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கும் என நினைக்கக்கூடாது. அவ்வாறு, தனக்கு எல்லாம் தெரியும் என அந்த நடிகர் நினைப்பது தவறு. நடிகர்களுக்கும் எல்லாமும் தெரியும் என மக்கள் நினைப்பது மிகப்பெரும் தவறு.”, என கூறினார்.

மேலும், அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கும் நல்லது, அந்த நடிகர்களுக்கும் நல்லது என அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close