தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, உரையாற்றிய நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தமிழ்நாட்டில் பணி புரிய வேண்டும் என்ற தனது கனவு நனவானது என்று கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி திங்கள்கிழமை பதவியேற்றார். “தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். இந்த மாநிலத்தின் மீது காதல் கொண்டேன், ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த மாநிலத்தில் பிறக்க வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று, என் கனவு நனவாகியுள்ளது. நான் இன்று பிறந்துள்ளேன். தமிழ்நாட்டிற்கு சட்டத்துறை சகோதார்ர்களுடன் சேவை செய்ய நான் இன்று பிறந்தேன்.” என்று கூறினார்.
முன்னதாக ராஜ்பவனில் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்க பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனிஸவர் நாத் பண்டாரி, வழக்கறிஞர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு நீதிபதி பண்டாரியை வாழ்த்தினர்.
பின்னர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம், “உங்கள் தலைமையில் உங்களுடைய பரந்த அனுபவத்தால் இந்த உயர் நீதிமன்றம் பயனடையும் என்று நான் நம்புகிறேன்” என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி பண்டாரி, நாம் பொதுமக்களுக்கு சேவை செய்ய கைகோர்க்க வேண்டும்” என்று கூறினார்.
செப்டம்பர் 13, 1960-ல் பிறந்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, ஜூலை 5, 2007-ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மார்ச் 15, 2019-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
ஒரு வழக்கறிஞராக, நீதிபதி பண்டாரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூர், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், ஜெய்ப்பூர் மற்றும் ஆரம்பத்தில் உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பு, சிவில், சேவை, தொழிலாளர், குற்றவியல் மற்றும் நடுவர் விவகாரங்களில் பணியாற்றினார்.
நீதிபதி பண்டாரி ரயில்வேயின் நிலை ஆலோசகராக பணியாற்றினார்; ராஜஸ்தான் சாலை போக்குவரத்து கழகம், அணுசக்தி கழகம், மாநில தேர்தல் ஆணையம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம், ராஜஸ்தானின் அனைத்து அரசு மின்சார நிறுவனங்கள், ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம், ஜெய்ப்பூர் மாநகராட்சி, ராஜஸ்தான் வீட்டுவசதி வாரியம், கங்கா நகர் சர்க்கரை ஆலை லிமிடெட் மற்றும் ராஜஸ்தான் வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
மேலும், நீதிபதி பண்டாரி ஜூன் 26 முதல் அக்டோபர் 10 வரை அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகப் பணிகளைச் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"