/indian-express-tamil/media/media_files/GCTlTM82fpQEJTwciody.jpg)
நடிகை கவுதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் மற்றும் அவரது மனைவிக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகை கவுதமி கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவை அளித்தார். இந்த புகாரில் “ எனது மகளை வளர்ப்பதற்காகவும், எனது மருத்துவ சிகிச்சைக்காகவும் எனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். அப்பொழுது அன்பழகன் என்பவர் நிலத்தை விற்பனை செய்வதற்கு உதவுதாக கூறினார். எனவே நிலத்தை விற்பனை செய்வதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்கினேன். ஆனால் அன்பழகன் மற்றும் அவரது மனைவுயும் போலி ஆவணங்களை தயாரித்து இடத்தை அபகரித்து விட்டனர். இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர் “ என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
மேலும் பாஜக கட்சியில் புகார் அளித்தும் மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி நடிகை கவுதமி பாஜக கட்சியில் இருந்து வெளியேறினார். கவுதமி அளித்த புகாரின் பெயரில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலிசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாளுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.