Advertisment

சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம்; டி.டி.வி. தினகரன் கண்டனம்

செய்யாறு அருகே மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Melma farmers portest

சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது Image Source: twitter.com/Arappor

செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா பகுதியில் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் முதல் 126 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.  கடந்த நவம்பர் 4-ம் தேதி நடைபயணம் சென்ற போது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 7 பேர் மீது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், மேல்மா சிப்காட் செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில் 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. மேல்மா சிப்காட் விரிவாக்கப் பணிகள், 54 அலகுகளாக பிரித்து 20 அலகுகள் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,700 ஏக்கர் தரிசு நிலம் எனவும் மீதமுள்ள 326 ஏக்கர் பட்டா நிலம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது. போராட்டக்கார்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

செய்யாறு அருகே மேல்மா பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.   

செய்யாறு நகரில் ஏற்கனவே சிப்காட் தொழிற்பூங்காவின் இரண்டு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவது அலகை அமைப்பதற்காக மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள  3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

நெல், கரும்பு, கேழ்வரகு, மற்றும் காய்கறிகள் என பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், எவ்வித கருத்தையும் கேட்காமல் நிலம் கையகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து அம்மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தங்களின் நிலவுரிமையை மீட்க கடந்த 125 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிவரும் விவசாயிகளை சமூகவிரோதிகள் போல சித்தரித்து அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது 

எனவே, நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு,  சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை டேக் செய்து தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் செய்த 20 விவசாயிகளை சென்ற நவம்பர் 4-ஆம் தேதி தமிழ்நாடு அரசு கைது செய்துள்ளது.

இக்கைதும், போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் உரிமை செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் உட்பட 5 நபர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ச்சப்பட வாய்ப்புள்ளது எனும் செய்தியும் தமிழ்நாடு அரசின் பாசிசப் போக்கினைக் காட்டுகிறது.

அறவழியில் போராடும் மக்கள் மீது அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் மக்களாட்சி முறைக்கு எதிரான போக்கினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதனை விட்டுவிட்டு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இல்லையேல், நாம் தமிழர் கட்சி மீண்டும் களமிறங்கி மக்களை இணைத்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேல்மா விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “ஸ்டாலின் ! தன் நிலத்திற்காக அற வழியில் போராடிய விவசாயியை குண்டர் என்று சொல்லும் நெஞ்சில் ஈரம் இல்லாத சர்வாதிகாரி நீங்கள்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயராம் வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “மேல்மா விவசாயிகள் மீது குண்டர் சட்டம் அதிகாரபூர்வமாக போடப்பட்டுவிட்டது.

திருவண்ணாமலையில் தன்னுடைய நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த கூடாது என்று அமைதியான வழியில் போராடிய பச்சயப்பன் என்ற விவசாயியை குண்டர் என்று அறிவித்து பாலியல் குற்றவாளி, கள்ளச்சாராய குற்றவாளி, விபச்சார தொழில் குற்றவாளி போன்றவர்களை கைது செய்யும் குண்டர் சட்டத்தில் தி.மு.க அரசு கைது செய்துள்ளது. 

மொத்தம் 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம்  போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது 

ஸ்டாலின் ! தன் நிலத்திற்காக அற வழியில் போராடிய விவசாயியை குண்டர் என்று சொல்லும் நெஞ்சில் ஈரம் இல்லாத சர்வாதிகாரி நீங்கள்” என்று சாடியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment