tiktok video, mobile snatchers active in tik tok video
Tiktok Video Help Chennai Polie To Arrest Mobile Snatchers : மொபைல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்திருந்த ஏழு இளைஞர்களை கைது செய்ய சென்னை போலீசாருக்கு டிக் டோக் வீடியோ உதவி புரிந்துள்ளது.
Advertisment
கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...
பாண்டி பஜார், சூலைமேடு பகுதிகளில் இரண்டு வழிபறி சம்பவங்கள் குறித்து சென்னை போலீஸ் ஒரு குழு அமைத்து விசாரித்து வந்தது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் போலீசார் விசாரித்து வந்தனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில், இந்த கும்பலிடம் தனது பொருளை பறிகொடுத்த ஒருவர் எதர்ச்சையாக டிக்டோக் வீடியோ ஒன்றை பார்த்துள்ளார். இவர்கள் தான் வழிப்பறி செய்தவர்கள் என்ற அடையாளம் கண்டவுடன் , உடனடியாக அந்த வீடியோவை காவல்துறையினரிடம் சமர்பித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளையும், இந்த டிக்டோக் வீடியோவையும் ஒப்பிட்டு பார்த்த போலீசார், தேடப்படும் நபர்கள் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டரிந்தனர் (இதற்கு டிக்டோக் வீடியோவும் உதவி செய்திருக்கும்)
பின்பு, சிறப்பு குழு இந்த ஏழு பேரையும் கையும் களவுமாக புடித்தது . இதில் நான்கு பேர் சிறுவர்கள் என்ற காரணத்தால் சிறுவர் விடுதிக்கு அனுப்ப பட்டுள்ளதாகவும் , மூன்று நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழிப்பறி கும்பலை குறித்து தெரிவிக்கையில், " டி,நகர் முதல் ரெட்ஹில்ஸ் வரை கும்பலாக வழிப்பறி செய்வது வந்ததாகவும். பர்மா பஜார், ரிச் ஸ்ட்ரீட் போன்ற இடங்களில் திருட்டு போன்களை விற்று வந்தாதாகவும்" காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், உல்லாச பயணம், கஞ்சா போன்ற காரணங்கள் இவர்களை இந்த வழிபறிக்கு தூண்டியதாக கூறிய போலீசார், டிக்டோக் போன்ற சமூக வலைதளங்களில் இவர்களின் பிரபலம் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில், ஏலகிரி பயணத்திற்கு சென்று சென்னை திரும்பும்போது இவர்களை மடக்கி பிடித்தோம் என்று போலீசார் கூறினார்.
உதாரணமாக, இதில் கைது செய்யப்பட்ட ஒரு நபருக்கு டிக்டோக்கில் 70,000க்கும் அதிகமான பாலோயர்ஸ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.