Advertisment

வாடகையும் தரவில்லை... ஏன் என்று கேட்ட உரிமையாளர் மீதும் தாக்குதல்... பியூஷ் மனுஷ் கைது

வாடகையை சரியான நேரத்தில் தருகின்றோம். வீட்டின் பராமரிப்பு மற்றும் ரிப்பேர்களுக்காக நாங்கள் இதுவரையில் 4 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம் - மோனிஷா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Activist Piyush Manush arrested for attacking his house owner

Activist Piyush Manush arrested for attacking his house owner

Activist Piyush Manush arrested : சேலத்தில் இயங்கி வரும் சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ். அவர் சேலம் மாவட்டத்தின் ஏற்காடு மலைத் தொடரின் கீழே, YCC சாலையில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் 53 வயதான ஆஷா குமாரி பெங்களூரில் வசித்து வருகின்றார்.

Advertisment

2018ம் ஆண்டு தன்னுடைய கணவர் இறந்த நிலையில், தான் சேலத்திற்கே வர விரும்புவதாகவும், அதனால் தன்னுடைய வீட்டினை காலி செய்து தர வேண்டும் என்றும் ஆஷா குமாரி பியூஷ் மனுஷிடம் தெரிவித்து வந்தார். இதனை பொருட்படுத்தாத பியூஷ் மனுஷ் தன்னுடைய குடும்பத்துடன் அங்கேயே தங்கி வந்துள்ளார்.

யானைகள் அறிவோம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்

இந்நிலையில் சேலம் வந்த ஆஷா குமாரி தன்னுடைய மகள் அக்‌ஷனா மற்றும் மருமகன் சாந்தன் குமார் ஆகியோருடன் சேர்ந்து பியூஷ் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டினை காலி செய்து தருமாறு குமாரி கூறியுள்ளார். இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்ற, பியூஷ் குமாரியை தாக்கியதாக தெரியவந்துள்ளது. காவல்துறையினர் வந்து இருதரப்பினரிடமும் பேசி சமாதானம் ஏற்படுத்த முயற்சி செய்தனர். இருப்பினும் குமாரி சேலம் காவல்துறையினரிடம் புகார் அளிக்க சேலம் காவல்துறையினர் அவரை கைது செய்தது. தன்னுடைய வீட்டில் குடியிருந்து வரும் பியூஷ் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக வீட்டு வாடகை தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : பாஜக அலுவலகத்தில் லைவ் வாக்குவாதம் – பியூஸ் மனுஷ் மீது தாக்குதல்

இது தொடர்பாக பியூஷின் மனைவி மோனிஷா கூறிய போது “நாங்கள் வாடகையை சரியான நேரத்தில் தந்து கொண்டு தான் இருக்கின்றோம். இந்த வீட்டின் பராமரிப்பு மற்றும் ரிபேர்களுக்காக நாங்கள் இதுவரையில் 4 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். வெளிப்புற அழுத்தங்களின் காரணமாகவே அவரை காவல்துறை கைது செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

Salem Piyush Manush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment