திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், பிஸ்டல் மற்றும் ரைபிள் சுடும் போட்டி கடந்த 24-ம் தேதி தொடங்கியது.
Advertisment
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருச்சி மாநகர ரைபிள் கிளப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் இந்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரைபிள் கிளப்பின் 47 வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 24-ம் தேதி தொடங்கியது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் தமிழகம் முழுவதும் இருந்து 1200 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர்.
மேலும் 16 வயது சப்யுத், 19 வயதினருக்கான யூத், 21 வயதினருக்கு ஜூனியர், 21 ல் இருந்து 45 வயதினருக்கான சீனியர், 45 வயதில் இருந்து 60 வயதிற்கான சீனியர் மாஸ்டர் ஆகிய பிரிவின் கீழ் போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், 51 வயதான நடிகர் அஜித் குமார் 45 வயது முதல் 60 வயது வரை வரையிலான மாஸ்டர் என்ற 10, 25, 50 மீட்டர் பிரிவுகளில் பங்கேற்க இன்று காலை திருச்சி வந்தார். அவர் 4 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் அவர் இன்று காலை முதல் போட்டியாக சீனியர் மாஸ்டர் பிரிவில் கலந்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமார் வீரபுரம் போலீஸ் ட்ரைனிங் சென்டரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான துப்பாக்கிச் கூடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி வந்துள்ள நடிகர் அஜித், கடந்த இரண்டு நாட்களாக நடிகர் அஜித் சமயபுரம் கோவிலுக்கு வருகிறார் என்று கூறப்பட்டதால் அங்கு கூட்டம் அலைமோதியது. அவர் வராததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையில் துப்பாக்கி சுடும் போட்டிக்காக அவர் திருச்சி வந்திருப்பது அவர் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil