/tamil-ie/media/media_files/uploads/2023/05/Ajith-KUmar.jpg)
நடிகர் அஜித் குமார் நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், இன்று அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் நேற்று பத்மபூஷன் விருதைப் பெற்று சென்னை திரும்பிய நிலையில், இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். இவருக்கு மத்திய அரசின் பத்மபூஷன் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நேற்று (29.04.2025) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பத்மபூஷன் விருது பெற்றுக்கொண்டார். இதையடுத்து, நடிகர் அஜித் குமார் சென்னை திரும்பினார்.
நடிகர் அஜித் குமார் நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், இன்று அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அஜித் குமாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்சியை ஏபடுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அஜித் குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அஜித் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல் நிலை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் அப்போலோ மருத்துவமனை இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக வசூலைக் குவித்து வருகிறது. நடிகர் அஜிட் சினிமா மட்டுமில்லாமல், கார் பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடி வருகிறார்.
சமீபத்தில் பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயத்தில் அவரது அணி 2-வது இடத்தைப் பிடித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.