தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் சாதனை படைத்து வரும் நடிகர் அஜித்துக்கு தற்போது பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்மபூஷன், பத்மஸ்ரீ, உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்திய அரசால் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான, பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சமூகத்தில், பொது சேவை மற்றும் குறிப்பிடத்தக்க, சாதனைகளை படைத்து வரும், நபர்களுக:கு இந்த விருதுககள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது நடிகரும், விளையாட்டு வீரருமான அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மட்டுமல்லாமல், நடன கலைஞரும் நடிகையுமான, ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பத்மஸ்ரீ விருது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இதில், கலைத்துறையில் குருவாயூர் துரை, சமையல் கலைஞர். செப் தாமோதரன், பத்திரிக்கையாளர் லட்சுமிபதி ராமசுப்பையர், எம்.டி.ஸ்ரீனிவாஸ், புரசை கண்ணப்பா சம்பந்தம், கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.