திருமணம் செய்வதாக கூறி, 70 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், ஆர்யா நேற்று சைபர் கிரைம் காவல்துறையினர் முன் விசாரணைக்கு ஆஜரானர்.
தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக இருந்து வரும் ஆர்யா, நடிகை சாயிஷா சைகல் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், இலங்கையை பூர்விகமாக கொண்ட, ஜெர்மனியில் வசித்து வரும் வித்ஜா என்பவர் நடிகர் ஆர்யா மீது மோசடி புகார் தெரிவித்துள்ளார். ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறியதாகவும், ஊரடங்கு காரணமாக நிதி சிக்கலில் இருப்பதாக கூறி தன்னிடம் ரூ .70.40 லட்சம் மோசடி செய்ததாகவும் வித்ஜா குற்றம் சாட்டினார்.
இது குறித்து, நடவடிக்கை எடுக்க இந்திய பிரதமர் அலுவலகம் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வித்ஜா கடிதம் எழுதியிருந்தார். மேலும் நடிகர் ஆர்யா மீது வழக்கு பதிவு செய்ய, அவர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இலங்கை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்மன் அனுப்பியதை அடுத்து நடிகர் ஆர்யா செவ்வாய்க்கிழமை சென்னை நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் ஆஜரானார்.
ஆர்யா இரவு 7 மணியளவில் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து சைபர் கிரைம் விங் இன்ஸ்பெக்டர் கீதா முன் ஆஜரானார். சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.
சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை. இலங்கை பெண்ணின் புகாரின் அடிப்படையில் ஆர்யாவின் அறிக்கையை பதிவு செய்வதற்கான முறையான விசாரணை இது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil