பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்
நடிகர் மற்றும் மிமிக்ரியில் டாக்டர் பட்டம் பெற்ற சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி பயிற்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தான் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியளராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை அலுவலகத்தில் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியளராக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் இன்று தன்னுடைய பகுதியில் வாழும் நரிக்குறவர் மக்களின் குறை களை அவர்களுடைய இருப்பிடத்திற்கு சென்று கேட்டு அறிந்திருக்கிறார். அதோடு வீட்டுமனை பட்டா இல்லாத 7 குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி இருக்கிறார். அதுபோல ஏற்கனவேபட்டா வைத்திருந்தவர்களுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இணைந்து வீடு கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆலோசனையும் வழங்கி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், நரிக்குறவர் மக்களின் குழந்தைகள் ஸ்கூலுக்கு ஒழுங்கா போறாங்களா? அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்று கேட்டு அறிந்திருக்கிறார். அப்போது அங்கு உள்ள மக்கள் பலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று அவரிடம் மனு கொடுத்து இருந்தனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
அப்போது அங்கிருந்த பெண்களில் ஒரு சிலர் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு தங்கள் கையால் செய்யப்பட்ட பாசி மாலைகளை கழுத்தில் அணி வித்திருக்கிறார்கள். தான் பதவியேற்ற பிறகு ஸ்ருதன் ஜெய் நாராயணன் தொடர்ச்சியாக பல ஏழைகளுக்கு உதவிவரும் நிலையில் அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகரின் மகன் நடிகராக ஆசைப்படாமல் படித்து கலெக்டர் ஆகி பல பேருக்கு உதவி செய்து வரும் ஸ்ருதன் ஜெய் நாராயணனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“