Chennai News Live Updates: வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள் என்பதைவிட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை - ஸ்டாலின்

Tamil Nadu News Update Today 13 July 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update Today 13 July 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin attack eps

Today Latest Live News Update in Tamil 6 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jul 13, 2025 21:10 IST

    திருவள்ளூர் ரயில் விபத்து: கோவைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

    திருவள்ளூர் அருகே இன்று (ஜூலை 13, 2025) நிகழ்ந்த டீசல் டேங்கர் ரயில் தீ விபத்து காரணமாக சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவதிக்குள்ளான பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

    பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி:

    சென்ட்ரலில் இருந்து கோவைக்கு: இன்று இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு சிறப்பு ரயில் புறப்பட்டு, நாளை (ஜூலை 14, 2025) காலை 9 மணிக்கு கோவை சென்றடையும்.

    கோவையில் இருந்து சென்ட்ரலுக்கு: கோவையில் இருந்து நாளை காலை 11 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்பட்டு, மாலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

     



  • Jul 13, 2025 21:06 IST

    வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள் என்பதைவிட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை - ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற கவிஞர் வைரமுத்து எழுதிய 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, "திருக்குறளை நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்; வள்ளுவர் மேல் கருத்துருவ வண்ணம் பூசும் அடாவடித்தனத்தை எதிர்க்க வேண்டும்; வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள் என்பதைவிட ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை," என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.



  • Advertisment
  • Jul 13, 2025 20:45 IST

    திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் ஒவ்வாத சாயத்தைப் பூச முயற்சி செய்கிறார்கள் - ஸ்டாலின்

    "திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் ஒவ்வாத சாயத்தைப் பூச முயற்சிக்கும் காலத்தில், தன் உரை வாளை எடுத்து, உடை வாளாக வீசியுள்ளார் வைரமுத்து," என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 13, 2025) நடைபெற்ற 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' நூல் வெளியீட்டு விழாவில் பேசினார்



  • Jul 13, 2025 20:38 IST

    ‘வள்ளுவர் கவிஞர் மட்டுமல்ல, கலகக்காரர்’ - மு.க.ஸ்டாலின்

    வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வள்ளுவர் புலவர் மட்டுமல்ல, புரட்சியாளர்; வள்ளுவர் கவிஞர் மட்டுமல்ல, கலகக்காரர்” என்று பேசினார்.



  • Advertisment
    Advertisements
  • Jul 13, 2025 19:46 IST

    தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை தேவை; வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீண்டும் மீண்டும் நிகழும் மீனவர்கள் கைது சம்பவங்கள் கவலை அளிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 13, 2025 19:41 IST

    இலங்கை கடற்படை கைது செய்த 7 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படை கைது செய்த 7 தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களையும், படகையும் விடுக்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



  • Jul 13, 2025 18:56 IST

    ஒட்டுக்கேட்புக் கருவி வைத்தது யார்? அன்புமணி மீது குற்றஞ்சாட்டவில்லை - ராமதாஸ்

    சென்னை பனையூரில் உள்ள மகள் காந்திமதி இல்லத்திற்கு வந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ஊடகங்களிடம் பேசுகையில், எனது வீட்டில் ஒட்டுக்கேட்புக் கருவியை அன்புமணி வைத்ததாக நான் குற்றஞ்சாட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 13, 2025 18:14 IST

    திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயில் விபத்து - 100% தீ அணைப்பு

    திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது தீ 100% அணைக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில்கள் செல்லும் மெயின் வழித்தடத்தில் அறுந்து கிடந்த மின்சார கேபிள்களை மீண்டும் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்டவாளத்தை சரி செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, சிறிது நேரத்தில் ரயில் குறிப்பிட்ட ஒரு வழித்தடத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது



  • Jul 13, 2025 17:33 IST

    சரக்கு ரயில் விபத்து; மழை காரணமாக மீட்புப்பணிகள் தாமதம்

    திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மழை காரணமாக மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



  • Jul 13, 2025 17:16 IST

    த.வெ.க ஆர்ப்பாட்டம் - பேரிகார்டுகள் சேதம்

    சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் பேரிகார்டுகள் சேதம் அடைந்துள்ளது. விஜயை பார்க்கும் ஆர்வத்தில் வந்த தொண்டர்களால் பொதுச்சொத்துகள் சேதமடைந்துள்ளன



  • Jul 13, 2025 16:47 IST

    கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தம்பனூர் காவல் நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



  • Jul 13, 2025 16:40 IST

    மியான்மர் எல்லையில் இந்தியா ட்ரோன் தாக்குதல்?

    மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், பல நடமாடும் முகாம்களில் அதிகாலையில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தடைசெய்யப்பட்ட அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். மேலும் 19 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்று இந்திய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் பிடிஐயிடம் தெரிவித்தார்.



  • Jul 13, 2025 16:35 IST

    அதிமுக உடன்தான் கூட்டணி: பாமக எம்.எல்.ஏ சதாசிவம்

    அ.தி.மு.க. உடன்தான் பா.ம.க. கூட்டணி வைக்கும் என அக்கட்சி எம்.எல்.ஏ சதாசிவம் தெரிவித்துள்ளார். சேலம் ஓமலூரில், பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தவர், எடப்பாடி பழனிசாமி வன்னியருக்கு மீண்டும் 10.5% இட ஒதுக்கீடு வழங்குவார். அவருடன்தான் கூட்டணி. வருங்கால கூட்டணி கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. கடந்த ஆட்சியில் 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கி, வன்னியருக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பெருமை சேர்த்ததாக கூறினார்.



  • Jul 13, 2025 16:32 IST

    ”5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு”

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெரிய வாக்குறுதியை அளித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன் என்று வாக்கு கொடுத்துள்ளார். இதை அடைய, தனியார் துறையில், குறிப்பாக தொழில்துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக உயர்மட்டக் குழு அமைக்கப்படுகிறது" என்று தனது எக்ஸ் பதிவில்  அவர் தெரிவித்துள்ளார்.



  • Jul 13, 2025 16:29 IST

    பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு

    ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான் அரசு. இந்த வழக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கைப்படி மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



  • Jul 13, 2025 16:03 IST

    கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு; சந்திரபாபு நேரில் இரங்கல்

    மறைந்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவுக்கு, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஒரு சிறந்த நடிகர். அவருடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. கடந்த 4 தசாப்தங்களாக கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 7 நந்தி விருதுகளை பெற்றுள்ள அவர், 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார் என்று கூறினார்.



  • Jul 13, 2025 15:33 IST

    காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம், பகல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாராளுமன்றத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Jul 13, 2025 15:30 IST

    சென்னை: 126 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் கோளாறு

    சென்னையில் இருந்து இலங்கைக்கு 126 பயணிகளுடன் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானம் ஓடுபாதைக்கு கொண்டு வரப்பட்ட போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதனையடுத்து உடனடியாக இயந்திரக்கோளாறை சரி செய்யும் பணியில் பொறியியல் அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து இயந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து 1.30 மணி நேரம் தாமதமாக விமானம் இலங்கைக்கு புறப்பட்டது.



  • Jul 13, 2025 15:04 IST

    16, 17ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நாளை மறுநாள் (ஜூலை 15-ம் தேதி) நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி ராணிப்பேட்டை, கோவை மாவட்டங்களில் ஜூலை 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Jul 13, 2025 14:50 IST

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.



  • Jul 13, 2025 14:48 IST

    சென்னை: காரில் 70 கிலோ கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது

    காரில் கடத்திய 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சென்னையைச் சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டப்ரோலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



  • Jul 13, 2025 14:44 IST

    46 கோவில்களில் நாளை குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு

    "46 கோவில்களில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது. 1,120 கோடி ரூபாய் அரசு மானியத்தில் தமிழ் கடவுளுக்கு 124 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. திருச்செந்தூர் கோவில் பணிகள் 14 ஆண்டுகளுக்கு பின்னர் எச்சிஎல் நிறுவனத்தின் 200 கோடி உடன் சேர்ந்த பணிகள் முடிந்துள்ளது. 110 படிகள் உள்ள மருதமலை கோவிலில் மின் தூக்கி பணிகள் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



  • Jul 13, 2025 14:41 IST

    கேரள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்-வானிலை மையம்

    கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் 18-ந் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்த காலத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 14-ந்தேதி மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 15, 16-ந் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 16-ந்தேதி வரை கேரள கடற்கரை முழுவதும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் இந்த காலத்தில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Jul 13, 2025 14:39 IST

    கோட்டா சீனிவாச ராவ் மறைவு: சிரஞ்சீவி நேரில் அஞ்சலி

    சிலகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பால் அவதிப்பட்டு வந்தார். 83 வயதாகும் அவர் ராவ் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் அந்த வகையில், நடிகர்கள், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கட் உள்ளிட்டோர் கோட்டா சீனிவாச ராவ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் கூறினர். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.



  • Jul 13, 2025 14:38 IST

    ”பள்ளிகளில் "ப" வடிவ இருக்கை மாணவர்களை பாதிக்கும்”

    மாணவர்களை வகுப்பறையில் "ப" வடிவில் அமர வைக்கும் பொழுது மருத்துவ ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகளை மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் தொடர்ந்து கழுத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை, கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மருத்துவர் என்ற முறையிலே அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



  • Jul 13, 2025 14:36 IST

    ”முன்னேற்றத்தைத் தடுக்கும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்”

    தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பட்டிதொட்டி எங்கும் தமிழக பாஜக-வின் வேர்களைப் பலப்படுத்தி 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை தமிழகத்தில் அமையச் செய்ய அடித்தளமிடும் அரும்பணியே தங்களுடையது. எனவே, மனப்பூர்வமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்கு வேண்டிய பணிகளை ஆற்றுங்கள் நிர்வாகிகளுக்கு நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • Jul 13, 2025 14:18 IST

    ஓரணியில் தமிழ்நாடு - 1 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர்

    ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை ஒரு கோடியைத் தாண்டியது. வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை சேர்க்கும் இந்த இயக்கத்தை ஜூலை 1-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



  • Jul 13, 2025 14:12 IST

    சரக்கு ரயிலில் தீ - ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் எரிந்து நாசம்

    டீசல் டேங்கர் ரெயிலில் அதிகாலை 5.20 மணிக்கு பற்றிய தீ, 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது முழுமையாக அணைக்கப்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. ரெயில் பெட்டிகள் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம், மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது.



  • Jul 13, 2025 13:44 IST

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, ராணிப்பேட்டை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில், ஜூலை 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



  • Jul 13, 2025 13:18 IST

    ரயில் தீ விபத்து - 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை

    திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரயில்வே ஏ.டி.ஜி.பி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Jul 13, 2025 12:56 IST

    7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முழுமையாக அணைக்கப்பட்ட தீ

    திருவள்ளூரில் டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், முழுமையாக தீ அணைக்கப்பட்டது என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.



  • Jul 13, 2025 12:48 IST

    த.வெ.க போராட்டத்தில் தொண்டர்கள் மயக்கமடைந்ததாக தகவல்

    திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, த.வெ.க சார்பில் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் சென்னை, சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10 தொண்டர்கள் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. 



  • Jul 13, 2025 12:27 IST

    வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

    இன்று (ஜூலை 13) நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, "மக்களின் ஆதரவு பெருகும் போது, பொறுப்பும், கடமையும் கூடுகிறது. வெற்றியை ஈட்ட அயராது பாடுபட வேண்டும். இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை தி.மு.க-விற்கு இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jul 13, 2025 11:51 IST

    “ஏன் ஒளிந்து கொள்கின்றீர்கள்?” - தவெக தலைவர் விஜய் கேள்வி

    "சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ-க்கு மாற்றியபோது, அது தமிழ்நாட்டு காவல்துறைக்கு அவமானம் என்றீர்கள். இன்று நீங்கள் உத்தரவிட்டிருப்பதற்கு பெயர் என்னங்க சார்? இப்போதும் அதே சிபிஐ-தானே? ஏன் நீங்கள் அங்கே போய் ஒளிந்து கொள்கிறீர்கள்? அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரிக்க, ‘நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும்' என்று தவெக வலுவாக கோரிக்கை வைத்திருப்பதால், பயத்தில் ஒன்றிய ஆட்சிக்குப் பின்னாடி ஒளிந்து கொள்கிறீர்கள்” என்று தவெக தலைவர் விஜய் கேள்விகளை எழுப்பியுள்ளார். 



  • Jul 13, 2025 11:47 IST

    ஆர்ப்பாட்டம் - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

    போலீசார் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம்; தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயக்கம் அடைந்த தொண்டர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி



  • Jul 13, 2025 11:39 IST

    திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து - அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள்

    திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தினால், சம்பவ இடத்தில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியேறினர் 



  • Jul 13, 2025 11:28 IST

    “Sorry-மா மாடல் சர்கார்” - விஜய்

    “அண்ணா பல்கலை மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? CM பதவி எதுக்கு சார்? அதிகபட்சம் உங்ககிட்ட வர்ற பதில், 'சாரி மா, நடக்கக்கூடாதது நடந்துடுச்சு மா' என்பதுதானே... இந்த வெற்று விளம்பர மாடல் திமுக சர்கார், இப்போ Sorry மா மாடல் சர்காரா மாறிடுச்சு” என்று தவெக தலைவர் விஜய் பேவ்சியுள்ளார். 



  • Jul 13, 2025 11:10 IST

    சரக்கு ரயில் தீவிபத்தைத் தொடர்ந்து மேலும் 5 விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

    சரக்கு ரயில் தீவிபத்தைத் தொடர்ந்து மேலும் 5 விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. திருப்பதி – சென்னை, மும்பை- சென்னை சென்ட்ரல், லோக்மான்ய திலக்-காரைக்கால் ரயில்கள் கூடூர் வழியாக இயக்கம். அகமதாபாத் – சென்ட்ரல், லோக்மான்ய திலக் -சென்ட்ரல் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.



  • Jul 13, 2025 11:10 IST

    கருப்பு சட்டை... கையில் பதாகை! தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய்!

    காவல் நிலைய மரணங்ளை கண்டித்து தவெக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. இதில், கருப்பு சட்டை அணிந்து ‘சாரி வேண்டாம், நீதி வேண்டும்' என்ற பதாகையை ஏந்தியபடி கலந்து கொண்டுள்ளார் தவெக தலைவர் விஜய்!



  • Jul 13, 2025 10:52 IST

    சரக்கு ரயில் தீ விபத்துக்குள்ளான பகுதிக்கு செல்ல வேண்டாம்: அமைச்சர் நாசர் அறிவுறுத்தல்

    ரயில் தீ விபத்துக்குள்ளான பகுதிக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் நாசர் அறிவுறுத்தியுள்ளார். தீ விபத்தில் உயிர்ச் சேதம் இல்லை, யாருக்கும் காயம் இல்லை. தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளோருக்கு உணவு, குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்று திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து நடந்த இடத்தில் ஆய்வுக்கு பிறகு அமைச்சர் நாசர் பேட்டி அளித்துள்ளார்.



  • Jul 13, 2025 10:41 IST

    திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து

    திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    1 காலை 5.50 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த வந்தே பாரத் ரயில்.
    2 காலை 6 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில்.
    3 காலை 6.25 மணிக்கு திருப்பதி புறப்பட இருந்த சப்தகிரி விரைவு ரயில்.
    4 காலை 7.15 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில்.
    5 காலை 7.25 மணிக்கு பெங்களூரு புறப்பட இருந்த டபுள் டெக்கர் விரைவு ரயில்.
    6 காலை 7.40 மணிக்கு பெங்களூரு புறப்பட இருந்த பிருந்தாவன் ரயில்.
    7 காலை 9.15 மணிக்கு நகர்சோல் புறப்பட வேண்டிய நகர்சோல் விரைவு ரயில்.
    8 காலை 10 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த கோவை அதிவிரைவு ரயில்.



  • Jul 13, 2025 10:41 IST

    தவெக தொண்டர் மயங்கியதால் பரபரப்பு!

    சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கடலூரை சேர்ந்த தவெக தொண்டர் செல்வகுமார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு; ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள் உடனடி முதலுதவி சிகிச்சை. கடும் வெயில் நிலவி வரும் சூழலில் போராட்டம் நடைபெறும் இடத்தில் தவெகவினர் குழுமி உள்ளனர்



  • Jul 13, 2025 10:40 IST

    திருவள்ளூரில் ரயில் தீ விபத்து - மோசம் அடையும் காற்றின் தரம்

    ரயில் தீ விபத்து - மோசம் அடைகிறது காற்றின் தரம் எரிபொருள் ஏற்றிவந்த சரக்கு ரயிலில் தீ விபத்து, திருவள்ளூரில் காற்றின் தரக் குறியீடு மோசமடைகிறது. "மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது, எரிபொருள் பற்றி எரிவதால் காற்றில் நுண்துகள் பாதிப்பு அதிகரிப்பு" என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. 



  • Jul 13, 2025 10:18 IST

    ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்டார் விஜய்!

    காவல் மரணங்களுக்கு நீதி கோரி தவெக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்டார் விஜய்; அவர் செல்லும் வழியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு. முதன்முறையாக போராட்டக்களத்திற்கு விஜய் வருவதால் தவெக-வினர் குவிந்து வருகின்றனர்



  • Jul 13, 2025 10:05 IST

    திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

    திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால் சென்னைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.



  • Jul 13, 2025 09:50 IST

    விபத்தில் 6 பெட்டிகள் தீப்பிடித்து சேதம்

    சென்னை திருவள்ளூர் அருகே தடம் புரண்டு தீப்பிடித்த சரக்கு ரயில்.. கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சி மணலியில் இருந்து 52 பெட்டிகளில் டீசலை ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி ரயில் புறப்பட்டுச் சென்றுள்ளது. விபத்தில் 6 பெட்டிகள் தீப்பிடித்து சேதமடைந்தன. 



  • Jul 13, 2025 09:25 IST

    முதன்முறையாக போராட்டக் களத்திற்கு வரும் விஜய்!

    காவல் மரணங்களுக்கு நீதி கோரி விஜய் தலைமையில் தவெக இன்று கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. இதில் பங்கேற்க, சென்னை சிவானந்தா சாலையில் சாரி வேண்டாம்; நீதி வேண்டும் என்று பதாகைகள் ஏந்தியபடி தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். முதன்முறையாக போராட்டக் களத்திற்உ விஜய் வரவுள்ள நிலையில் அவர் செல்லும் வழியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 



  • Jul 13, 2025 09:22 IST

    ரயில் தீ விபத்து - மோசம் அடைகிறது காற்றின் தரம்

    எரிபொருள் ஏற்றிவந்த சரக்கு ரயிலில் தீ விபத்து, திருவள்ளூரில் காற்றின் தரக் குறியீடு மோசமடைகிறது. "மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது, எரிபொருள் பற்றி எரிவதால் காற்றில் நுண்துகள் பாதிப்பு அதிகரிப்பு" என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.



  • Jul 13, 2025 09:20 IST

    அமைச்சர் நாசர் ஆய்வு

    திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.



  • Jul 13, 2025 09:06 IST

    தீ விபத்தால் உயிர்ச்சேதம் இல்லை: ரயில்வே

    திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்தால் உயிர்சேதம் ஏதும் இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை; மின் கேபிள் எரிந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்காக உதவி எண்களை ரயில்வே அறிவித்துள்ளது. 044- 2535 4151, 044 2435 4995 ஆகிய உதவி எண்ணை பயணிகள் தொடர்பு கொள்ளலாம்.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: