New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/05/dhanush-condolences.jpg)
dhanush condolences
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நேற்று பலியான தனுஷ் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த காளியப்பன் மரணம் வேதனைத் தருவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
dhanush condolences
தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில், காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் நேற்று பரிதாபமாக பலியானார். திரேஸ்புரம் பகுதியில் நேற்று மதியம் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் மீது குண்டு பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவரின் உயிர் துடி துடித்துப் பிரிந்தது. பின்னர் அவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காளியப்பனின் மரணத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவு செய்துள்ளார். அதில், “என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரைச் சந்திக்கிறேன்.” என்று பதிவு செய்துள்ளார்.
துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்.
— Dhanush (@dhanushkraja) 24 May 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.