மூச்சுத் திணறல்; சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி!

இன்று அதிகாலை 3 மணியளவில் விஜயகாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

DMDK Leader Vijayakanth Admitted in Chennai MIOT : நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்தார் விஜயகாந்த. கடந்த ஆண்டு லேசான கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நலமுடன் வீடு திரும்பினார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து சில தொகுதிகளில் மட்டும் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது, பொதுமக்களிடையே உரையாற்றாமல் கைகளை மட்டுமே அசைத்து வாக்கு சேகரித்தார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டு பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்த விஜயகாந்த, அதே காரணத்துக்காகவே தேர்தலில் போட்டியிடாமலும் இருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் விஜயகாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக, தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் விஜய்காந்த் வீடு திரும்புவார் எனவும், பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor dmdk leader vijayakanth admitted in chennai miot treatment undergoing doctors monitoring

Next Story
தமிழகத்தில் விரைவில் மாதாந்திர மின் கட்டண கணக்கீடு; மின் கட்டணம் குறையும் எப்படி?minister Senthil Balaji, monthly electricity bill calculation, மின் கட்டணம், மாதந்திர மின் கட்டணம், மின் கட்டணம் எப்படி குறையும், அமைச்சர் செந்தில் பாலாஜி, monthly electricity calucalation reading, tamil nadu, eb bill
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com