Advertisment

நடிகர் கவுண்டமணி கைக்கு வந்த ரூ.50 கோடி சொத்து... 20 ஆண்டு சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!

நடிகர் கவுண்டமணி தனது சொத்தை மீட்க 20 ஆண்டுகளாக நடத்திய சட்டப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. நடிகர் கவுண்டமணி ரூ.50 கோடி மதிப்புள்ள தனது சொத்தை மீட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Goundamani re entry in Otha votu Muthaiya movie, Goundamani re entry, Goundamani acting in Otha votu Muthaiya movie, Goundamani acting with Yogi Babu, 84 வயதில் கதை நாயகனாக கவுண்டமணி ரீ என்ட்ரி, 'ஒத்த ஓட்டு முத்தையா' கவுண்டமணி, கவுண்டமணி உடன் யோகி பாபு, அரசியல் படத்தில் கவுண்டமணி, Goundamani re entry, Otha votu Muthaiya movie, Yogi Babu

நடிகர் கவுண்டமணி ரூ.50 கோடி மதிப்புள்ள தனது சொத்தை மீட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் 1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் நிலத்தை வாங்கியிருந்தார். கவுண்டமணி வாங்கிய மொத்தம் 5 கிரவுன்ட் மற்றும் 454 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தில், வணிக வளாகம் கட்ட திட்டமிட்டார்.  இந்த இடத்தில் சுமார் 22, 700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் கட்டி தர பிரபல தனியார் நிறுவனத்தோடு கவுண்டமணி ஒப்பந்தம் செய்திருந்தார். மேலும், 15 மாதத்தில் கட்டடம் கட்டும் பணிகளை முடித்து தந்து ஒப்படைக்குமாறு கவுண்டமணி ஒப்பந்தம் செய்திருந்தார். 

Advertisment

வணிக வளாகம் கட்டடம் கட்டுவதற்காக, ரூ. 3.58 கோடி ஒப்ந்ததாரரால் கட்டணம் போடப்பட்டு, 1996 முதல் 1999 காலகட்டம் வரை ரூ. 1.4 கோடி கவுண்டமணி தரப்பில் இருந்து அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2003-ம் ஆண்டு வரை இந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கவுண்டமணி தான் வாங்கிய இடத்தில், வணிக வளாகம் கட்டுவதற்காக ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம் அந்த இடத்தைக் கையகப்படுத்தியதால் பிரச்னை ஆனது. 

இதையடுத்து, நடிகர் கவுண்டமணி 2003-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர் ரூ. 46.51 லட்சத்துக்கு மட்டுமே பணிகள் முடிவடைந்திருப்பதாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

இதைத்தொடர்ந்து, இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, கட்டுமான பணிகள் முழுமையாக முடித்த பின்னர் பணம் தராவிட்டால் அதை கேட்க முடியும். தற்போது முடித்திருக்கும் பணிகளை ஒப்பிடுகையில் ரூ. 63 லட்சம் அதிகமாகவே கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கவுண்டமணி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, நடிகர் கவுண்டமணியிடமிருந்து பெற்ற 5 கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி 2008-ம் ஆண்டு உத்தரவிட்டார். 

ஆனால், தனியார் கட்டுமான நிறுவனம், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2021-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த ஆர். சுப்பிரமணியன், ஆர். சக்திவேல் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர். மேலும், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  அதோடு, கவுண்டமணியுடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர். 

ஆனால், அந்த கட்டுமான நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தது. 

நடிகர் கவுண்டமணி தான் வாங்கிய நிலத்தை மீட்க 20 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றம் வரை சென்று மீட்டுள்ளார். 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடந்து, கவுண்டமணிக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டப் போராட்டம் மூலம் கவுண்டமணி கைக்கு வந்த சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 50 கோடி என்கிறார்கள். இது நடிகர் கவுண்டமணி 20 ஆண்டுகளாக நடத்திய சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக அமைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

goundamani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment