"இனி விதைப்பது நற்பயிராகட்டும்": கமல் பொங்கல் வாழ்த்து

உழவுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு தமிழர்களால் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உழவுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு தமிழர்களால் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே பொங்கலிட்டு சூரியனை வழபடுவது வழக்கம்.
இன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது போகிப்பண்டிகையின் நம்பிக்கை. நாளைய தினம் பொங்கல் பண்டிகை உலக தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது.

சாதி, மத பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் விழா.
பொங்கல் பண்டிகைக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.” என குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close