Karunas | அதிமுகவில் சேலம் மேற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு சமீபத்தில் வலையொளிக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் வாய்க்கு வந்தப்படி பேசியிருந்தார்.
அதில் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகைகள் சப்ளை செய்யப்பட்டனர் எனக் கூறியிருந்தார். மேலும் நடிகை திரிஷா குறித்தும் இந்த விவகாரத்தில் தொடர்புப் படுத்தி பேசியிருந்தார்.
மேலும் நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.மான கருணாஸ் தொடர்பாகவும் அவர் பேசியது வைரலானது. இந்த நிலையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “ஏ.வி.ராஜு அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பியுள்ளார்; ஏவி ராஜூ மீதும் மற்றும் பல யூடியூப் சேனல்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுத்து வீடியோ பதிவுகளை நீக்கி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகை திரிஷா கிருஷ்ணன் ட்விட்டரில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்தநிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது” எனத் தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். நடிகை திரிஷா தொடர்பான பேச்சுக்கு பெப்சி அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதறகிடையில் தனது பேச்சுகளை ராஜூ வாபஸ் பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“