scorecardresearch

தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபுவின் தமிழ்க் கனவு

Actor Mahesh Babu: தமிழ் சினிமா வெற்றிக்கனவை நனவாக்க ஒரு நேரடி தமிழ்படம் நடிக்கலாமா என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார்.

Mahesh Babu in tamil Movie, நடிகர் மகேஷ்பாபு, தமிழ்ப் படத்தில் மகேஷ்பாபு
Mahesh Babu in tamil Movie, நடிகர் மகேஷ்பாபு, தமிழ்ப் படத்தில் மகேஷ்பாபு

தெலுங்கின் முன்னணி கதாநாயகனாக 60-களில் இருந்து 80-கள் வரை இருந்தவர் நடிகர் கிருஷ்ணா. தமிழிலும் சில படங்கள் நடித்தார். இவரின் மகன் தான் தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவும், தென்னிந்தியாவின் பெரிய கலக்ஷன் கதாநாயகர்களில் ஒருவருமான மகேஷ்பாபு.

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தெலுங்கு சினிமா ஒருகாலத்தில் சென்னையில் இயங்கியபோது அவர் தந்தையுடன் இங்கு இருந்தார். தெலுங்கு சினிமா, ஹைதராபாத்துக்கு சென்றவுடன் அவர் தந்தையுடன் அங்கு சென்றார்.

தெலுங்கில் அவர் நம்பர் ஒன் கதாநாயகனாக உருவெடுத்தாலும் சிறிய வயதில் தான் வளர்ந்த சென்னையில் தமிழ்படம் நடிக்கவேண்டும் என்பது அவரின் பெருங்கனவுகளில் ஒன்று. சமீபத்தில் அவர் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்தாலும் அது இரு மொழிகளிலும் பெரிய வரவேற்ப்பை பெறவில்லை. எனவே அவரின் தமிழ் சினிமா வெற்றிக்கனவை நனவாக்க ஒரு நேரடி தமிழ்படம் நடிக்கலாமா என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறார்.

இதற்காக முக்கிய இயக்குனர்கள் சிலருடன் மகேஷ்பாபு தரப்பில் பேசி வருகிறார்கள். மகேஷ்பாபு நடிக்கும் தமிழ்ப் பட அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Actor mahesh babu in tamil movie

Best of Express